Sunday, February 28, 2010

ஆயிரத்தில் ஒரு (உண்மை) review

என்னடா படம் இது! ஆயிரத்தில் ஒருவனாம். அந்த மாதிரி ஆயிரத்தில் ஒருத்தன்தான் இந்த படத்த தெளிவா புரிஞ்சிகிட்டு கேவலமா திட்ட முடியும். படத்துல மார்க்கெட்ல வெல போகாத 2 ஹீரோயின்கள். எதுக்குன்னு பாத்தா, கதைக்காக 10 % உடையோட, மத்தபடி எல்லாமே 'உபயம்- glamour '.So, Like many of our films, இந்த படமும் நம்ம மக்களோட ரசனைய ரொம்ப கேவலமா மதிப்பிட்டிருக்குன்னு நல்லா தெரியுது. கார்த்திக் இந்த படத்துல இவங்க ரெண்டு பேரையும் பாத்து வழிறது மூலம் ஒரு common man-ஓட கீழ்த்தனமான மனநிலைய ரொம்ப பெருமையோட காட்டிருக்காரு Director. Cinema-க்கு இத விட்ட உருப்படியான வேற வேலையே இல்லையா?
அப்படி இருந்தும் front row-ல உக்கார்ந்திருக்கும் மக்கள் கை கொட்டி ரசிச்சிட்டு இருக்காங்களே? எப்படி??
நாம கஷ்டப்பட்டு வாங்கின ticket வீண் போகலைன்னு நானே எனக்கு ஒரு போய்ய சொல்லி பார்த்தேன்.. என்ன ஆச்சரியம், நானும் விசில் அடித்தேன்!